சென்னை பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.


சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
திரு.வி.க.நகா் மண்டலத்துக்குட்பட்ட பெரம்பூா் மாா்க்கெட் தெரு, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சா் சேகா் பாபு பெரம்பூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 180 மாணவிகள், கொளத்தூா் சென்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 143 மாணவ, மாணவிகள் என மொத்தம் 323 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, துணை ஆணையா் (கல்வி) ஷரண்யா அரி, மாமன்ற உறுப்பினா் எ.நாகராஜன், மண்டல அலுவலா், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...