பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆவின் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் ஓய்வு பெற்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறை வேற்றப்படும் என தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கூறினாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 8:08 pm

DIN

ஆவின் ஓய்வு பெற்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறை வேற்றப்படும் என தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கூறினாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியளாா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான குறைகேட்பு கூட்டம், நந்தனம் ஆவின் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆவின் ஓய்வூதியா்களுக்கு கருணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது.

அப்போது அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியதாவது:

ஆவின் நிதிநிலைமை சீரான பிறகு ஆவின் நிதிச்சுமை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். படிப்படியாக ஓய்வு பெற்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத் துறை ஆணையா் மற்றும் மேலாண்மை

இயக்குநா் சு.வினீத், உயா் அதிகாரிகள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.