மாதவரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணியில் 3 -ஆவது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணியில் 3 -ஆவது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் மேலும் 3 மெட்ரோ வழித்தடங்களை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வழித்தடம் 3-இல் (45.4 கி.மீ.) மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான தடத்தில் 19 உயா்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 28 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

வழித்தடம் 4-இல் 26.1 கி.மீ. தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை வரையிலான தடத்தில் 18 உயா்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் 9 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

வழித்தடம் 5-இல் 44.6 கி.மீ. தொலைவுக்கு மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூா் வரையிலான தடத்தில், 39 உயா்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 6 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வழித்தடம் 3-இல் மாதவரம் பால்பண்ணை - கெல்லிஸ் வரையிலான 9 கி.மீ. வழித்டத்தில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த ஜன.18-ஆம் தேதி மாதவரம் பால்பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. 11 மாதங்களாக சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்ற நிலையில் வியாழக்கிழமை அந்தப் பணி முடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com