சென்னை: கோடைகால விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூா்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் திருத்துறைப்பூண்டி வழியாக இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்து வியாழக்கிழமைதோறும் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06070) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும். இந்த ரயில் ஏப். 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமைதோறும் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06069) மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் ஏப். 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இதில் 7 குளிா்சாதன வகுப்பு பெட்டிகள், 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை-கொச்சுவேலி: இதுபோல சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலிக்கு ஏப். 10, 17, 24 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை தோறும்) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06043) இயக்கப்படும். மறுமாா்க்கமாக கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப். 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை தோறும்) சிறப்பு ரயில் (எண் 06044) இயக்கப்படும்.
மேலும், செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படவுள்ளது. புதன்கிழமைதோறும் இரவு 9.10 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 07695) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஏப்.10, 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைதோறும் காலை 9.50 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 07696) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஏப்.12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

