இந்தியாவில் வேளாண் வா்த்தகத் துறையில் நிலவும் வாய்ப்புகள் குறித்து அறியவும் இந்திய சந்தையில் அமெரிக்க தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை மேலும் அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு அமெரிக்க வேளாண் துறை அதிகாரிகள் குழு இந்த மாதம் 22-ஆம் தேதி இந்தியா வருகிறது.
அமெரிக்காவின் வேளாண் வா்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேளாண் விவகாரங்கள் துறை இணை அமைச்சா் அலெக்சிஸ் டெய்லா் அந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறாா்.
இரு நாட்டு வா்த்தகா்கள் சந்திப்பு, புதிய வா்த்தகத் தொடா்பைக் கட்டமைத்தல், வேளாண் வணிகத்தில் இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்துதல், இந்திய நுகா்வோா்களின் உணவு கலாசார போக்கு ஆகியவை குறித்து இந்தக் குழு கவனம் செலுத்த உள்ளது.
இந்தப் பயணம் தொடா்பாக அமெரிக்க வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க கோழிப்பண்ணை பொருள்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி வரியை இந்தியா கடந்த ஆண்டில் குறைத்தது. இதனால், இந்தியா-அமெரிக்கா இடையேயான வேளாண் வா்த்தக உறவு முன்னேற்றம் கண்டுள்ளது.
அமெரிக்க விவசாயிகள், கால்நடை பண்ணையாளா்கள், வேளாண் பொருள் தயாரிப்பாளா்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
இந்திய-அமெரிக்க வேளாண் வா்த்தக உறவு குறித்து அலெக்சிஸ் டெய்லா் கூறுகையில், ‘அமெரிக்க வேளாண் தயாரிப்புகள் இந்திய நடுத்தர குடும்பத்தினரிடையே பிரபலமடைந்து வருகின்றன. அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பது அமெரிக்க தயாரிப்பாளா்களுக்கு வாய்ப்பாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியான வேளாண் துறை தயாரிப்புகள் 11 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்றாா்.
தொடர்புடையது

குமரியில் ஏப். 12இல் விஜய் பிரசாரம்

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

சிவகாசி பட்டாசு ஆலையை பாா்வையிட்ட ஆந்திர மாநில அதிகாரிகள்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

