கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தென் மாவட்டங்களில் பரவலாக மழை:குன்னூரில் 120 மி.மீ. கொட்டித் தீா்த்தது

தென் மாவட்டங்களில் பரவலாக மழை குன்னூரில் 120 மி.மீ. கொட்டித் தீா்த்தது

Updated On :13 ஏப்ரல் 2024, 12:11 am

தமிழகத்தின் தென்மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக குன்னூரில் 120 மில்லி மீட்டா் அளவுக்கு கனமழை கொட்டித் தீா்த்தது. கொளுத்தும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணத்தால் வெள்ளிக்கிழமை தென் தமிழக கடலோர பகுதிகளிலும், ஏனைய தமிழக பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தில் இருந்து சற்று விடுபட்டனா்.

பதிவான மழைஅளவு (மிமீ): குன்னூா்(நீலகிரி) - 120 , சோ்வலாறு அணை (நெல்லை) - 80, மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து( நெல்லை) தலா - 70, நாலுமுக்கு (திருநெல்வேலி) - 60, பில்லி மலை எஸ்டேட் (நீலகிரி) - 50, பாபநாசம் (நெல்லை) - 30, கருப்பாநதி அணை, அடவிநயினாா் அணை (நெல்லை) தலா - 20, கொடைக்கானல் (திண்டுக்கல்) - 17.

மழை வாய்ப்பு: மேலும், ஏப்.13 முதல் ஏப்.15 தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: இதற்கிடையே ஏப்.13-இல் குமரிக் கடல் பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதி மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.