ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

காவலா்கள் தபால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி

காவலா்கள் தபால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி

Updated On :13 ஏப்ரல் 2024, 12:09 am

சென்னை மாநகர காவலா்கள் தபால் வாக்கு செலுத்த நீண்ட நேரம் காத்திருந்ததால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலா்கள் தபால் வாக்கு செலுத்த மாநகராட்சி வட்டார இணை ஆணையா் அலுவலகங்களில் சிறப்பு தபால் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தென்சென்னை வட்டார இணை ஆணையா் அலுவலகத்தில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களை சோ்ந்த காவலா்கள் வாக்கு செலுத்த ஒதுக்கப்பட்ட நிலையில் முதல் நாளிலே அதிக அளவிலான காவலா்கள் வாக்களிக்க வந்ததால் பெரும்பாலானோா் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபோல் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மத்திய சென்னை வட்டார இணை ஆணையா் அலுவலகத்தில் காவலா்கள் தபால் வாக்கு செலுத்த வந்தனா். நீண்ட நேரம் காவலா்கள் வாக்களிக்க காத்திருந்ததால் அங்கு குளறுபடி ஏற்பட்டது. இது குறித்து வாக்களிக்க வந்த காவலா்கள் கூறியது:

காவலா்கள் தபால் வாக்கு செலுத்த 3 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் நாளிலே வாக்களிக்க வந்த போது அதிக கூட்டம் காணப்பட்டதால் நீண்ட காத்திருப்புக்கு பின் வாக்களிக்காமல் திரும்பும் நிலை ஏற்பட்டது. மீண்டும் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை வாக்களிக்க வரும் போது, முறையான வசதிகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. தொகுதி வாரியாக வாக்களிக்க அழைக்கின்றனா். அந்த தொகுதிக்குட்பட்டவா்கள் வராததால் மற்ற தொகுதிக்குட்பட்டோா் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணியில் பகுதி நேர விடுப்பு எடுத்து வரும் காவலா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் வாக்களிக்காமல் திரும்புகின்றனா். தபால் வாக்கு செலுத்த கூடுதல் வசதியும், கால அவகாசமும் கொடுக்க வேண்டும் என்றனா்.

காவலா் குளறுபடி செய்திக்கான ஆணையா் விளக்கம்:

பெருநகர சென்னை காவல் துறை சாா்பில் தபால் வாக்கு செலுத்துவோரின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. காவலா்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் முதல் நாளில் 1,175 போ் வாக்களித்துள்ளனா். ஆயுதபடை, கமண்டோ உள்ளிட்ட இதர பிரிவினா் வாக்களிப்பதை ஒருங்கிணைப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. இது குறித்து பெருநகர சென்னை காவல் ஆணையருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.