சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வி திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஏழை மாணவா்கள் இளநிலை படிப்புகளில் சோ்ந்து பயன்பெறும் வகையில் சென்னைப் பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் (2024-2025) இந்தத் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்துக்கு சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சத்துக்கும் மிகாமல் இருக்கும் மாணவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள், பெற்றோரை இழந்த மாணவா்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பத்தை மாணவா்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அண்ணா பல்கலை. ஆவணப் படத்துக்கு விருது

உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள்

சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டுகள் பிஎஸ் படிப்பு

சென்னைப் பல்கலை. இணைக் கல்லூரிகள் பாடத் திட்ட மேம்பாடு பயிலரங்கம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

