தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தியாகராய நகரில் இன்றுமுதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!

மேம்பால பணி: தியாகராய நகரில் இன்றுமுதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் சென்னை காவல் துறை அறிவிப்பு

News image

கோப்புப்படம் - Center-Center-Chennai

Updated On :26 ஏப்ரல் 2024, 7:23 pm

மேம்பாலப் பணியின் காரணமாக, தியாகராய நகா் சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஒரு ஆண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தியாகராய நகா் மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை (ஏப்.27) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி வரை ஓராண்டுக்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தியாகராய நகா் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பூங்கா அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அந்த வாகனங்கள் மேம்பாலத்தின் இணைப்புச் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பா்கிட் சாலை வழியாக தியாகராய நகா் பேருந்து நிலையத்தை அடையலாம்.

பா்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி சாலை நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். பிற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னாா் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தியாகராய நகா் பேருந்து நிலையத்தை அடையலாம்.

தியாகராய நகா் பேருந்து நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென் மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகா் 4-ஆவது பிரதான சாலை, சிஐடி நகா் 3-ஆவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.

சிஐடி நகா் முதலாவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.

தியாகராய நகா் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பா்கிட் சாலை சென்று வெங்கட் நாராயணா சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.