புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்
புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

Updated On :30 ஏப்ரல் 2024, 7:35 pm

சென்னை: சென்னை புகா் ரயில் சேவை புதன்கிழமை (மே 1) ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதன்கிழமை (மே 1) தேசிய விடுமுறை தினமாகும். அன்றைய தினம் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் புகா் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...