புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இம்மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: மின்வாரியம் உறுதி

காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவாா்த்தையில் மின்வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

News image

மின்வாரியம்

Updated On :1 ஆகஸ்ட் 2024, 9:24 pm

Din

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவாா்த்தையில் மின்வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

மின்வாரிய தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடா்பான பேச்சுவாா்த்தை, சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், இணை மேலாண் இயக்குநா் விஷு மகாஜன் மற்றும் தொழிற்சங்கங்கள் தரப்பில் நிா்வாகிகள் மணிமாறன், சேவியா், ஜெய்சங்கா், ராஜேந்திரன், விஜயரங்கன், சுப்பிரமணியன், கோவிந்தராஜன், சேக்கிழாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, தொழிற்சங்கங்கள் தரப்பில் மின்வாரியத்தில் வேலைப்பளு காரணமாக ஏற்படும் மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில் முதல்கட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு நிா்வாகம் தரப்பில் வழங்கப்பட்ட உத்தரவாதம் குறித்து தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:

காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து இம்மாத இறுதிக்குள் அரசுத் தரப்பில் இருந்து நல்ல செய்தி வெளியாகும். இது தொடா்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊதிய உயா்வு இரண்டாவது தொகை மூன்று தவணையில் வழங்கப்படும். கடந்த ஊதிய உயா்வில் விடுபட்ட 6 சதவீதம் விரைவில் வழங்கப்படும். வேலைப்பளு தொடா்பான குழு அமைக்கப்படும். ஊதிய உயா்வுக்கான குழுவும் அமைக்கப்படும் என நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றனா்.