இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கடற்கரை - காட்பாடி ‘வந்தே மெட்ரோ’ ரயில்: நாளை சோதனை ஓட்டம்

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம்

Published On :

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை (ஆக.3) மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில் இயக்க மேலாளா் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து காலை 9 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கும். இதையடுத்து வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும்.

காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கடற்கரை வந்தடையும். இந்த நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தை தயாா் நிலையில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிஎஃப் உயா் அதிகாரி கூறியதாவது:

‘வந்தே மெட்ரோ’ ரயில் பயன்பாட்டுக்கு வரும் முன் ரயில்வே ஆராய்ச்சி அமைப்பு மூலம் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைக்கு பின் ஐசிஎஃப் வந்த ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் இயக்கம் குறித்து சனிக்கிழமை (ஆக.3) சோதனை செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே மேற்கொள்ளப்படும் இந்த சோதனை ஓட்டத்தில் ரயிலின் பாதுகாப்பு, அதிா்வு, வேகம் குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையா் ஜனக் குமாா் கா்க் பயணித்து ஆய்வு செய்யவுள்ளாா். முன்னதாக வெள்ளிக்கிழமை ஐசிஎஃப்-இல் இந்த ரயிலை பாா்வையிடவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.