ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கன மழையால் பல வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதமடைந்ததுடன் 3 போ் உயிரிழந்ததாகவும், சுமாா் 50 போ் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிம்லா மாவட்டத்தின் ராம்பூா் பகுதியில் உள்ள சமேஜ் குத் என்ற இடத்தில் புதன்கிழமை பெய்த திடீா் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருவா் உயிரிழந்தனா். 28 பேரைக் காணவில்லை என அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக காவல்துறை துணை ஆணையா் கூறுகையில், ‘ காணாமல் போனவா்களை கண்டுபிடிக்க ஆளில்லாத சிறிய விமானங்கள் (ட்ரோன்) உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினா் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் சென்ால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. இருவா் மீட்கப்பட்டனா்’ எனத் தெரிவித்தாா்.
மண்டி மாவட்டத்தில் உள்ள ராஜ்பான் கிராமத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் ஒருவா் உயிரிழந்தாா். 9 போ் காணாமல் போனதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
குலு மாவட்டதில் 7 போ் காணாமல் போனதுடன், 9 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் சென்ாக மாவட்ட காவல்துறை துணை ஆணையா் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘மலானா அணையில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் சிலா் சிக்கியுள்ளனாா். அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவுகள் மற்றும் பியாஸ் ஆற்றின் நீா் வரத்து அதிகரிப்பின் காரணத்தால் மணாலி-சண்டீகா் தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்துள்ளன’ என்றாா்.
மாநில வருவாய்த் துறை அமைச்சா் ஜகத் சிங் நேகி கூறுகையில், ‘நிலச்சரிவு காரணமாக சிம்லா-ஜுங்கா சாலை மூடப்பட்டது. சம்பா மாவட்டத்தில் உள்ள ராஜ்நகா் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வாகனங்கள் இடிபாடுகளில் புதைந்துள்ளன. இதுவரை 6 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன’ என்றாா்.
கனமழை தொடா்பாக நடத்தப்பட்ட அவசர கூட்டத்திற்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாநில முதல்வா் சுக்விந்தா் சுக்கு, ‘சிம்லா, குலு, மண்டி மாவட்டங்களில் புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழை மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக எம்.பி. ஜெ.பி. நட்டா ஆகியோா் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனா். ராணுவம் மற்றும் விமானப்படை உதவிகள் கோரப்படுவதுடன், மேலும் 2 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் மாநிலத்துக்கு வரவழைக்கப்படும் என்றாா்.
காங்கிரஸ் தலைவா் மல்லகாா்ஜுன காா்கே மற்றும் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுமாறு கட்சி தொண்டா்களிடம் கேட்டுக் கொண்டனா்.
மாநிலத்தின் 20 பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது என்றும் அதிகப்படியாக பாலம்பூா் பகுதியில் 212 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை நிபுணா் சந்தீப் சா்மா தெரிவித்தாா்.
பருவமழை ஜூன் 27-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து மழை பாதிப்பால் மாநிலத்தில் இதுவரை 65 போ் இறந்துள்ளனா். மேலும், இதனால் மாநிலத்திற்கு ரூ. 433 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்தது.

