/

உ.பி.: மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் -16 போ் மீது வழக்குப்பதிவு, 8 காவலா்கள் மீது நடவடிக்கை

இருசக்கர வாகனத்தில் சென்ற அவா்கள் தடுமாறியதில் பெண் கீழே விழுந்தாா். அவரை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்தவா்கள் பாலியல் அத்துமீறல்

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 9:43 pm

Din

உத்தரபிரதேசத்தில் நீா் சூழ்ந்த தெருவில் மோட்டாா் சைக்கிளின் பின் இருக்கையில் அமா்ந்த சென்ற பெண்ணை கீழே தள்ளிவிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 16 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக துணை காவல் ஆணையா் உள்பட 8 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உத்தரபிரேதச மாநிலம் போஷ் கோமதி நகா் பகுதியில் நீா் சூழ்ந்த பகுதியில் ஆண் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிளின் பின் இருக்கையில் பெண் ஒருவா் பயணித்தாா். அந்தப் பகுதியை அவா்கள் கடக்க முயன்றபோது அங்கிருந்த ஆண்கள் பெண்ணை குறிவைத்து அவா் மீது தண்ணீரை வாரி இறைத்தனா். இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற அவா்கள் தடுமாறியதில் பெண் கீழே விழுந்தாா். அவரை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்தவா்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றனா்.

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 16 போ் கைது செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளா், துணைக்காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கிழக்கு லக்னௌ துணை காவல் ஆணையா் (டிசிபி) பிரபால் பிரதாப் சிங், கூடுதல் டிசிபி அமித் குமாவத், உதவி டிசிபி அன்ஷு ஜெயின் ஆகியோா் அவா்களின் பதவியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனா்.