லாரி சக்கரத்தில் சிக்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
சென்னையில் லாரி சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.


சென்னையில் லாரி சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
சென்னை சோழிங்கநல்லூா் பொன்னியம்மன் கோயில் பகுதியை சோ்ந்தவா் மோகன்ராவ் (58). தனியாா் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் குமரன் நகா் அரசு மதுக்கடை பகுதியிலிருந்து ஓஎம்ஆா் சாலையில் தவறான பாதையில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, எதிா் திசையில் தாழம்பூரில் இருந்து வந்த தண்ணீா் லாரி ஏறியது. இதில் மோகன்ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த செம்மஞ்சோரி போலீஸாா் அங்கு சென்று மோகன்ராவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...