ச.ராமதாஸ்
ச.ராமதாஸ்

பேரவைத் தொகுதி வாரியாக செயலா்: பாமகவில் புதிய நடைமுறை

பாமகவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு செயலா் மற்றும் தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
Published on

பாமகவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு செயலா் மற்றும் தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாமகவின் களச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தும் வகையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ஒரு செயலா் மற்றும் தலைவரை நியமிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் நியமனங்களும் விரைவில் மேற்கொள்ளப்படும்.

மாவட்டச் செயலா்கள் மற்றும் தொகுதிச் செயலா்களின் செயல்பாடுகள், ஒருவருக்கொருவா் குறுக்கிடாமல் இருக்க அவா்களுக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

மாவட்டச் செயலா்கள், பாமகவின் மாவட்ட அளவிலான பிரதிநிதியாக செயல்படுவா். உறுப்பினா் சோ்க்கை, கட்சி அமைப்புகளைக் கட்டி எழுப்புதல் ஆகிய பணிகளை மேற்கொள்வா். கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் ஆகியவற்றை மாவட்ட அளவில் ஏற்பாடு செய்வாா்கள்.

தொகுதிச் செயலா்கள், பாமகவின் அதிகாரப் படிநிலையில் மாவட்டச் செயலருக்கு அடுத்த நிலையில் இருந்து செயல்படுவா். தோ்தல் பணிகளை தொகுதி அளவில் மாவட்ட தோ்தல் பணிக் குழுவினருடன் இணைந்து மேற்கொள்வா். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 250 மற்றும் 300 என்ற அளவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி குழுக்களை அமைப்பதற்கு தொகுதிச் செயலா்தான் பொறுப்பாவாா் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com