மனு பாக்கருக்கு அமைச்சா்கள் வாழ்த்து
மனு பாக்கரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.


புது தில்லி, ஆக. 8: பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
பாரீஸில் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கா், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவா் பெற்றாா்.
இந்தச் சரித்திர சாதனையைத் தொடா்ந்து, புதன்கிழமை நாடு திரும்பிய மனு பாக்கா், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆகியோரை வியாழக்கிழமை அவா் நேரி சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
ரூ.30 லட்சம் பரிசுத்தொகை: மனு பாக்கருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் ரூ.30 லட்சம் பரிசுத்தொகையை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வழங்கி கௌரவித்தாா். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. இதில் இந்திய அணிக்கு முன்னின்று கொடியேந்தி அணிவகுப்பில் பங்கேற்விருக்கும் மனு பாக்கா் சனிக்கிழமை மீண்டும் பாரீஸ் செல்கிறாா்.
நாடு திரும்பினாா் குசேல்: இதனிடையே, துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மற்றொரு இந்தியரான ஸ்வப்னில் குசேல் வியாழக்கிழமை நாடு திரும்பிய நிலையில், அவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...