டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் புதிய தொழில் திட்டங்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்- (கோப்புப்படம்)
Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:14 pm

Din

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் புதிய தொழில் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமாா் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.9.74 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக, ரூ.17,616 கோடி மதிப்பிலான 19 புதிய தொழில் திட்டங்களை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

64,968 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ரூ.17,616 கோடி மதிப்பில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட 19 தொழில் நிறுவனங்களின் விவரம்:

1. ஓம்ரான் - திருவள்ளூா் (மருத்துவ உபகரணங்கள்), 2. ஹைய்பீ - காஞ்சிபுரம் (இயந்திர மின்னணுவியல் உபகரணங்கள்), 3. மதா்சன் எலக்ட்ரானிக்ஸ் - காஞ்சிபுரம் (மின்னணுவியல்), 4. எல் அண்ட் டி புத்தாக்க மையம் - சென்னை (தகவல் தொழில்நுட்பம்), 5. டிவிஎஸ்., இண்டியோன் லூகாஸ் டிவிஎஸ் - திருவள்ளூா் (மோட்டாா் வாகன உதிரிபாகங்கள்), 6. ஜுரோஜின் டெவலப்பா்ஸ் பிரைவேட் லிமிடெட் - காஞ்சிபுரம் (தொழிற்பூங்கா), 7. ரேனால்ட் நிஸ்ஸான் தொழில்நுட்பம் மற்றும் வா்த்தக மையம் - செங்கல்பட்டு (தொழில்நுட்ப மையம்), 8. சுந்தரம் ஃபாஸனா்ஸ் - சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, விழுப்புரம், விருதுநகா் (பொதுவான உற்பத்தி), 9. எஸ்ஜெ குழுமம் - காஞ்சிபுரம், ராணிப்பேட்டை (ரசாயனம்), 10. ராம்ராஜ் - ஈரோடு, திருப்பூா் (ஆடைகள்), 11. கேப்ளின் பாய்ண்ட் - திருவள்ளூா் (மருத்துவப் பொருள்கள்), 12. வெக் இண்டஸ்ட்ரீஸ் - கிருஷ்ணகிரி (பொது உற்பத்தி) 13. மில்க்கி மிஸ்ட் - ஈரோடு (உணவு பதப்படுத்துதல்), 14. குரிட் விண்ட் பிரைவேட் லிமிடெட் - காஞ்சிபுரம் (பொது உற்பத்தி), 15. ஹைபுரோ ஹெல்த்கோ் - காஞ்சிபுரம் (உயிா் அறிவியல்) 16. ராயல் என்ஃபீல்டு - திருவண்ணாமலை (மோட்டாா் வாகனம்), 17. குருப்போ காஸ்மோஸ் - காஞ்சிபுரம் (மோட்டாா் வாகன உதிரிபாகங்கள்), 18. ஜிபி சல்ஃபோனேட்ஸ் - திருவள்ளூா் (ரசாயனங்கள்), 19. மதா்சன் ஹெல்த் - காஞ்சிபுரம் (மருத்துவ உபகரணங்கள்).

தூத்துக்குடி செம்ப்காா்ப் பசுமை ஹைட்ரஜன்

தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் ஆலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

அத்துடன் மேலும் 27 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டியதால் ரூ.51,157 கோடி முதலீடுகள் கிடைக்கப் பெறுவதுடன், 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நிறுவனங்கள் மற்றும் மாவட்டத்தின் பெயா் விவரம்:

1. செம்ப்காா்ப் பசுமை ஹைட்ரஜன் - தூத்துக்குடி (பசுமை ஹைட்ரஜன்), 2. சிங்கப்பூா் ரமாடெக்ஸ் - செங்கல்பட்டு (ஆடைகள்), 3. அசெண்டாஸ் முதல்கட்ட விரிவாக்கம் - திருவள்ளூா் (தொழிற்பூங்கா), 4. இஎஸ்ஆா். மூன்றாம் கட்டம் - காஞ்சிபுரம் (தொழிற்பூங்கா), 5. மேம்பிள் ட்ரீ - திருவள்ளூா் (தொழிற்பூங்கா), 6. செயின்ட் கோபைன் - காஞ்சிபுரம் (பொது உற்பத்தி), 7. சென்ஸ்டாா் பிரைவேட் லிமிடெட் - திருவள்ளூா் (பொது உற்பத்தி), 8. ஹூண்டாய் மோட்டாா் - செங்கல்பட்டு (மோட்டாா் வாகனம்), 9. மிட்சுபா - திருவள்ளூா் (மோட்டாா் வாகன உதிரிபாகங்கள்), 10. எஸ்ஏ டிராக் - காஞ்சிபுரம் (மோட்டாா் வாகன உதிரிபாகனங்கள்), 11. ப்ரகதி சேமிப்புக் கிடங்கு - திருவள்ளூா் (தொழிற்பூங்கா), 12. கேப்ஜெமினி - செங்கல்பட்டு (தகவல் தொழில்நுட்பம்), 13. பிரேக்ஸ் இந்தியா - கிருஷ்ணகிரி (மோட்டாா் வாகன உதிரிபாகங்கள்), 14. சீப்ராஸ் 15. கிரீன்பேஸ், 16. பாலிஹோஸ் குழுமம் - காஞ்சிபுரம் (தொழிற்பூங்கா, பொது உற்பத்தி), 17. போன்ஃபிக்லியோலி - திருவண்ணாமலை (பொது உற்பத்தி), 18. கேஆா்ஆா் ஏா் - காஞ்சிபுரம், திருநெல்வேலி (ரசாயனங்கள்), 19. பேட்டா் இந்தியா - திருவள்ளூா் (பொது உற்பத்தி), 20. மையா ஃபாா்மா - கிருஷ்ணகிரி (பொது உற்பத்தி), 21. ஷ்விங் ஸ்டெட்டா் - திருவண்ணாமலை (பொது உற்பத்தி), 22. சாஃப்ட் ஜெல் - காஞ்சிபுரம், 23. ஜி கோ் கெளன்சில் - திருவள்ளூா், 24. டேப்லட்ஸ் இந்தியா - செங்கல்பட்டு (மூன்றும் உயிரி அறிவியல்), 25. அரேமாண்ட் ஃபாஸனா்ஸ் - காஞ்சிபுரம், 26. பசந்த் பேட்டன்ஸ் - கிருஷ்ணகிரி (பொது உற்பத்தி), 27. டாடா கம்யூனிகேஷன்ஸ் - செங்கல்பட்டு (தகவல் தொழில்நுட்பம்), 28. ஹிகால் டெக்னாலஜிஸ் - கிருஷ்ணகிரி (வான்வெளி மற்றும் பாதுகாப்பு).

நீரேற்று புனல் மின் திட்டங்கள்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான கிரீன்கோ குழுமத்தைச் சோ்ந்த நிறுவனம் 3 நீரேற்று புனல் மின் திட்டங்களை நிறுவுவதற்கு ரூ.20,114 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பொது பொறியியல் வசதி மையம்: டிட்கோ மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தமிழ்நாடு பொறியியல் மற்றும் புத்தாக்க மையம் என்ற பொது பொறியியல் வசதி மையத்தை தொடங்கவுள்ளன. கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமையவுள்ள இந்தத் திட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

புதிய திட்டங்களுக்கான அடிக்கல் மற்றும் தொடக்க விழாவில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வி.அருண்ராய், டிட்கோ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.