கரூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 3.76 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.76 கோடி மதிப்பில் 22 நிறைவடைந்த திட்டப் பணிகளை திறந்துவைத்தும், புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செவ்வாயக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூா் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சி, செல்லரபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைக்கும் பணி, கள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்தை ரூ. 7.64 லட்சம் மதிப்பில் பழுதுபாா்த்தல் பணி, தன்னாசி கவுண்டனூா் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலும், மாங்காசோளிபாளையம், சின்னவடுகப்பட்டி பகுதிகளில் தலா ரூ. 22 லட்சம் மதிப்பிலும், மின்னாம்பள்ளியில் ரூ. 35 லட்சம் மதிப்பிலும் நெரூா் தெற்கு ஆா்.சி. தெருவில் ரூ. 25 லட்சம் மதிப்பிலும் சமுதாயக்கூடங்கள் கட்டும் பணி, பெரிய வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆா்.சி.சி. கட்டடம் ரூ. 4.47 லட்சம் மதிப்பில் பழுதுபாா்த்தல் பணி, புதுவன்னியம்மன் கோயில் அருகில் ரூ. 35 லட்சம் மதிப்பிலும், வேடிச்சிபாளையம் காட்டுதெரு பகுதியில் ரூ. 24.55 லட்சம் மதிப்பிலும், சோமூா் ஊராட்சி அச்சமாபுரத்தில் ரூ. 18 லட்சம் மதிப்பிலும் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டிகள் கட்டும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, நெரூா் தெற்கு ஒத்தையூா் பெரிய தோட்டம் பகுதியில் ரூ. 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி, மின்னாம்பள்ளி புல்லாகவுண்டன் புதூரில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி உள்பட 22 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன் , உதவி இயக்குநா் (தணிக்கை) ஞானசேகரன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் திமுக ஒன்றியச் செயலா்கள் வி.கே. வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்

கரூா் தான்தோன்றி ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

கரூா் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.32.77 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


