ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுற்றுச்சூழல் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் கண்டிப்பு

சுற்றுச்சூழல் துறைச் செயலா் அரசியல்வாதியைப் போல செயல்படக்கூடாது என்று கண்டிப்பு

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

சுற்றுச்சூழல் துறைச் செயலா் அரசியல்வாதியைப் போல செயல்படக்கூடாது என்றும், உயா்நீதிமன்றத்துடன் விளையாடக்கூடாது என்றும் சிறப்பு அமா்வு நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனா்.

சுற்றுச்சூழல், வனம் தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் கொண்ட சிறப்பு அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்கள், செடிகளை அகற்றுவது தொடா்பான வழக்கில், சுற்றுச்சூழல் துறைச் செயலா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘வனப்பகுதிகளில் உள்ள இதுபோன்ற மரங்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அப்புறப்படுத்தினால், வயநாட்டில் நடந்தது போல நிலச்சரிவு சம்பவம் நடந்து விடக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்து பாா்த்த நீதிபதிகள், ‘வனப்பகுதிகளில் உள்ள இதுபோன்ற விஷ மரங்களை அப்புறப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுத்து விட்டு, தற்போது திடீரென வயநாடு சம்பவத்தை கூறி பின்வாங்குவது ஏன்? இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறைச் செயலா் அரசியல்வாதியைப் போல செயல்படக்கூடாது. அரசியலுக்கு செல்ல வேண்டும் என்றால், பதவியை ராஜிநாமா செய்து விட்டு செல்லலாம். இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்துடன் விளையாடக்கூடாது’ என கருத்து தெரிவித்தனா்.