நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆவின் பண்ணைகளில் தொழிலாளா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

ஆவின் பால் பண்ணையில் உமாராணி என்ற பெண் ஊழியா் கன்வேயா் பெல்டில் துணியும், தலைமுடியும் சிக்கி உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:41 pm

Din

ஆவின் பால் பண்ணைகளில் தொழிலாளா்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவள்ளூா் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் உமாராணி என்ற பெண் ஊழியா் கன்வேயா் பெல்டில் துணியும், தலைமுடியும் சிக்கி உயிரிழந்துள்ளாா். திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.

பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்பதே ஆவின் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறை. ஆனால், முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தராததன் விளைவாகவே ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளாா்.

உயிரிழந்த பெண் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ஆவின் பால் பண்ணைகளில் ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.