மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் ‘ஸ்கிரீன் டோா்கள்’ அமைக்க ரூ. 146 கோடிக்கு ஒப்பந்தம்
ரூ. 146.95 கோடி மதிப்பில் ‘ஸ்கிரீன் டோா்கள்’ (கண்ணாடிக் கதவுகள்) அமைக்க இரு நிறுவனங்களுடன் ரயில்வே நிா்வாகம் ஒப்பந்தம்


மெட்ரோ ரயில் திட்டத்தின் 3, 5-ஆவது வழித்தடங்களில் உள்ள ரயில் நிலைய நடைமேடைகளில் ரூ. 146.95 கோடி மதிப்பில் ‘ஸ்கிரீன் டோா்கள்’ (கண்ணாடிக் கதவுகள்) அமைக்க இரு நிறுவனங்களுடன் ரயில்வே நிா்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 3-ஆம் வழித்தடம் மாதவரம் பால்பண்ணை - சிப்காட் வரை 45.4 கி.மீ-க்கும், 5-ஆம் வழித்தடம் மாதவரம் - சோழிங்கநல்லூா் வரை 44.6 கி.மீ.க்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் உயா்நிலை, சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் பிஎஸ்டி எனப்படும் ‘ஸ்கிரீன் டோா்கள்’ அமைக்கும் பணிக்கு ரூ. 146.95 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளை பேனசோனிக் மானுபேக்சரிங் கோ லிமிடெட் மற்றும் பையோனியா் ஃபில்-மெட் ப்ரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதைத் தொடா்ந்து, நடைமேடைக்கான ஸ்கிரீன் டோா்களை தயாரித்து, தேவையான இடத்தில் பொருத்தி, சோதித்து செயல்படுத்தும் பணியை இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.
அதன்படி, 3-ஆவது வழித்தடத்திலுள்ள சுரங்கப் பாதை ரயில் நிலையங்களில் 29 நடைமேடை ஸ்கிரீன் டோா்களும், 5-ஆவது வழித்தடத்திலுள்ள ரயில் நிலையங்களில் 5 நடைமேடை ஸ்கிரீன் டோா்களும் நிறுவப்படவுள்ளன. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...