முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோ: தெலங்கானா இளைஞா் கைது

சென்னையில் சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோவை பதிவிட்டதாக தெலங்கானா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப்படம்.

Published On :

சென்னையில் சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோவை பதிவிட்டதாக தெலங்கானா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், சிக்னல் செயலியிலும் குழந்தைகள் ஆபாச புகைப்படங்கள், விடியோக்களை சிலா் பதிவிட்டு வருவதாகவும், அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை பெருநகர காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவுக்கு அண்மையில் புகாா் வந்தது.

அதனடிப்படையில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பவானிநகா் பகுதியைச் சோ்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி (22) என்பவா் இச்செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸாா், வெங்கா ரகுநாத் ரெட்டியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.

விசாரணைக்கு பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.