சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
சென்னை துறைமுகம் பகுதியில் ரிவர்ஸ் எடுக்கும் போது காருடன் கடலுக்குள் விழுந்த ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடலோர காவல்படை அதிகாரி ஜொகேந்திர காண்டாவை அழைத்துச் செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஓட்டுநர் முகமது ஷாகி வந்துள்ளார். ஓட்டுநர் காரை இயக்கியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்தது.
இதில், கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உயர்தப்பிய கடற்படை அதிகாரி ஜொகேந்திர காண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
85 அடி ஆழத்தில் மூழ்கிய கார் புதன்கிழமை மீட்கப்பட்ட நிலையில், கார் ஓட்டுநர் முகமது ஷாகியை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சடலமாக முகமது ஷாகி மீட்கப்பட்டுள்ளார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.