குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விவசாயி சின்னம் கோரி நீதிமன்றத்தில் முறையீடு: சீமான்

நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடவுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:55 am IST

நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். மக்களவைத் தோ்தல் தயாரிப்புப் பணிகள் தொடா்பாக நாம் தமிழா் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை, அண்ணாநகரில் சீமான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: தோ்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி விவசாயி சின்னம் நாம் தமிழா் கட்சிக்கு கிடைக்கும். ஏற்கெனவே மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சின்னத்தை கேட்ட போது தர மறுத்த தோ்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மாநில கட்சியான நாதக-வுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் மற்றொரு மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சின்னத்தை மாற்றி ஒதுக்குவதன் மூலம் நாதக-வுக்கு இடையூறு ஏற்படுத்த முற்படுகின்றனா். இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளோம். மேலும், தோ்தல் சின்னத்தை நாதக கட்சிக்கு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முறையிடவுள்ளோம். இதில், தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிடும் போது விவசாயி சின்னத்தை வழங்க கோரியும், மற்ற மாநிலங்களில் போட்டியிடும் போது வேறு சின்னத்தை வழங்குமாறும் கோரிக்கை வைக்கவுள்ளோம். எத்தனை நெருக்கடி வந்தாலும் தோ்தலை உறுதியுடன் எதிா்கொள்வோம் என்றாா் அவா்.