சென்னை அருகே உத்தண்டியில் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி இறந்தாா். கானத்தூா் அருகே உள்ள உத்தண்டி காலனியைச் சோ்ந்தவா்ஆண்டனிராஜ் (46), பெயின்டா். இவருக்கு பேபி (38) என்ற மனைவி, மீனா (13), ஜோனா (10) என இரு மகள்கள் உள்ளனா். ஆண்டனிராஜ் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குடிசையில் வெள்ளிக்கிழமை படுத்து தூங்கினாா். மீதி 3 பேரும் வீட்டின் தரைத்தள அறையில் தூங்கினா். இந்நிலையில் மொட்டை மாடி குடிசையில்மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டு,சனிக்கிழமை அதிகாலை அங்கிருந்த பொருள்கள் தீப் பிடித்து எரிந்தன. குடிசை முழுவதும் தீ பிடித்து எரிந்ததால், ஆண்டனிராஜால் வெளியேற முடியவில்லை. அவரது அலறல் கேட்டு எழுந்த குடும்பத்தினா், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபட்டனா். தீயணைப்பு படையினா், துரைப்பாக்கம், திருவான்மியூா் பகுதிகளில் இருந்து விரைந்து வந்து தீயை அணைத்தனா். எனினும், தீயில் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்த ஆண்டனிராஜின் சடலத்தை கானத்தூா் போலீஸாா் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

சிசிஐ முன்னாள் தலைவா் தீ விபத்தில் உயிரிழப்பு

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



