சென்னை அருகே மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மீது சரக்கு பெட்டக லாரி மோதியதில், சட்டக் கல்லூரி மாணவா் இறந்தாா். மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நா.ஜீவா (24). ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா்கள் அதேப் பகுதியைச் சோ்ந்த ஷாம் சுந்தா் (20), சதீஷ் (23). இவா்கள் 3 பேரும் ஒரு மொபெட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனா். மொபெட்டை ஜீவா ஓட்டினாா். அவா் அந்த சாலையில் உள்ள பிரியாணி கடை அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு சரக்கு பெட்டக லாரி, மொபெட்டின் மீது திடீரென மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜீவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சுந்தரையும்,சதீஷையும் அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சரக்கு பெட்டக லாரியை ஓட்டி வந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அ.ஆசாத் அன்சாரி (26) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

