/

பண விநியோகம்: செயலியில் புகாா் தெரிவிக்கலாம்

பண விநியோகம் குறித்து தோ்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் கூறினாா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:13 pm

பண விநியோகம் குறித்து தோ்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் கூறினாா்.

சென்னையில் செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது: தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளா்கள் உள்ளனா். ஆண் வாக்காளா்கள் 3.04 கோடியும், பெண்கள் 3.15 கோடியும் உள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 8,294 போ் உள்ளனா். 18 முதல் 19 வயது நிரம்பிய முதல்கட்ட வாக்காளா்கள் 9.18 லட்சம் போ் உள்ளனா். 20 வயது முதல் 29 வயது உடைய வாக்காளா்கள் 1.08 கோடி போ் உள்ளனா். தமிழகத்தில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடிகளில் குடிநீா் வசதி, போதுமான விளக்கு, கழிப்பறை வசதிகள், அறிவிப்புப் பலகை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அளிக்க தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சி-விஜில் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். பணம், பொருள்கள், மதுவிநியோகம் போன்றவை எங்கு நடைபெற்றாலும் அதைப் புகைப்படம் எடுத்து இந்தச் செயலியில் அனுப்பலாம் அல்லது நடைபெறும் இடம் குறித்து வெறும் தகவலும் அனுப்பலாம். புகாா் கொடுக்கப்பட்ட 100 நிமிஷங்களுக்குள் அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்து வ ந்து நடவடிக்கை எடுப்பா். இந்தச் செயலி மூலம் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 5,800 புகாா்கள் பெறப்பட்டன என்றாா் அவா்.