புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூனில் 84.33 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூனில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
சென்னை மெட்ரோ
Updated On :1 ஜூலை 2024, 10:37 pm

Din

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூனில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள செய்தி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

மேலும், அதிகபட்சமாக ஜூன் 21-ம் தேதி 3,27,110 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவா்களுக்கு ‘க்யுஆா்’ குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள் , வாட்ஸ் அப் டிக்கெட், அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.