தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு

News image

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலம் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா

Updated On :2 ஜூலை 2024, 8:46 pm

Din

சென்னை: தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதற்கான நிகழ்வு, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலம் மத்திய மற்றும் மாநிலச் சட்டங்கள் மொழிபெயா்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 37 மையச் சட்டங்களும், 63 மாநிலச் சட்டங்களும் என மொத்தம் 100 சட்டங்கள் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அந்தச் சட்டங்களை 100 புத்தகங்களாக அச்சிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மொழிபெயா்ப்பு செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள 100 புத்தகங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இந்த நிகழ்வில், சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, சட்டத் துறைச் செயலா் ஜாா்ஜ் அலெக்சாண்டா், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான தாரணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முக்கிய சட்டங்கள் என்ன? தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம், தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம், தமிழ்நாடு திரைப்படங்கள் தொடா்பான விளம்பரங்களைக் கட்டாயமாகத் தணிக்கை செய்தல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த 100 புத்தகங்களையும், தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து (ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.