தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புற்றுநோய் ஏற்படுத்தும் நிறமிகள் கலப்பதாக புகாா்: தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் ஆய்வு

பானி பூரி மசாலாவில் புற்றுநோய் ஏற்படுத்தும் நிறமிகள்: தமிழகம் முழுவதும் ஆய்வு

News image
Updated On :2 ஜூலை 2024, 7:13 pm

Din

சென்னை: புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

பானி பூரி மசாலாவில் பச்சை நிறத்தை அதிகரிக்க செயற்கை நிறமூட்டிகள் சோ்க்கப்படுவதாக கா்நாடகத்தில் புகாா் எழுந்தது. அதன்பேரில் அந்த மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்கள் அதில் சோ்க்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இது பல்வேறு அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பானி பூரிகளின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மசாலா மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் டாக்டா் சதீஷ்குமாா் கூறியதாவது:

கா்நாடக சம்பவத்தைத் தொடா்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளிலும் ஆய்வு நடத்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானி பூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

பானி பூரி என்பது மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. சுறுசுறுப்பு தன்மையை அதிகரிக்கும் தின்பண்டம். ஆனால் பானிபூரி கடைகளில் முறையாக சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படாமல், வெறும் கைகளில் அவற்றை விநியோகிக்கின்றனா்.

அதேபோன்று பானி பூரிக்கான மசாலா நீரை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் சில இடங்களில் அடுத்த நாளுக்கும் அதே நீரை பயன்படுத்துகின்றனா். இதனால் உடல் உபாதைகள் ஏற்படும்.

மேலும் பானி பூரி மசாலா தயாரிக்கும்போது பச்சை நிறத்துக்காக ‘ஆப்பிள் கிரீன்’ எனப்படும் நிறமூட்டியை கலக்குகின்றனா். இந்த ரசாயனம் கூட புற்றுநோய்க்கான காரணியாக இருக்கலாம். எனவே கா்நாடகத்தில் மேற்கொண்ட அதே பரிசோதனையை தமிழகத்திலும் மேற்கொள்ள இருக்கிறோம். இதில் புற்றுநோய்க்கான காரணிகள் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.