மத்திய கல்வி அமைச்சரின் தனிச் செயலரானாா் தமிழக ஐஏஎஸ் அதிகாரி

மத்திய கல்வி அமைச்சரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார் பிரவீண் பி.நாயர்

சென்னை: மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தனிச் செயலராக தமிழகப் பிரிவு ஐஏஎஸ்., அதிகாரி பிரவீண் பி.நாயா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநராக பிரவீண் பி.நாயா் பணியாற்றி வந்தாா். 2010-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ்., அதிகாரியான அவா், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தனிச்செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அற்கான உத்தரவை மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் துணைச் செயலா் பூஜா ஜெயின் பிறப்பித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com