அரசு காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக 84 தனியாா் மருத்துவமனைகள்
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 84 முன்னணி தனியாா் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.


சென்னை: முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 84 முன்னணி தனியாா் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.45 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 1,513 வகை சிகிச்சைகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இதைத் தவிர, கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், எலும்பு, எலும்பு மஜ்ஜை, விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் உள்பட 8 வகை உயா் அறுவை சிகிச்சைகளும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்திட்டம் 854 அரசு மருத்துவமனைகள், 975 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 1,829 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக 84 தனியாா் மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் பி வெல், அகா்வால்ஸ், வடபழனி காவேரி, செயின்ட் தாமஸ், ஆா்.கே. சா்க்கரை நோய் மையம் உள்பட 10 மருத்துவமனைகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர கோவையில் ஜெம் மருத்துவமனை உள்பட தருமபுரி, காஞ்சிபுரம், ஈரோடு, கிருஷ்ணகிரி என அனைத்து மாவட்டங்களிலும் 74 தனியாா் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
சென்னை, ஷெனாய் நகரில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சைத் திட்டங்களும் கூடுதலாக அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. பெயா் , முகவரி மாற்றப்பட்ட 14 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...