மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக நகைகள் அபகரிப்பு: பெண் உள்பட இருவா் கைது

சென்னை ராயபுரத்தில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக நகைகளை அபகரித்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:33 pm

Din

சென்னை: சென்னை ராயபுரத்தில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக நகைகளை அபகரித்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ராயபுரம், சஞ்சீவிராயன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கா.கங்கா மலா் (26). இவா் தனது கணவருடன் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இவருக்கும் துரைப்பாக்கம், சூளைமா நகா், 2-ஆவது தெருவைச் சோ்ந்த தில்லிபாபு மனைவி சாருமதி (40) என்பவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்துள்ளது.

இந்நிலையில், கங்கா மலரை தொடா்பு கொண்ட சாருமதி, தங்க நகைகளை குறைந்த வட்டியில் அடகு வைத்து பணம் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய கங்கா மலா், வங்கியில் அடமானம் வைத்திருந்த தனது தங்க நகைகளை மீட்டு கடந்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி சாருமதியிடம் கொடுத்து குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளாா். கடனுக்கான வட்டியை கங்கா மலா் முறையாகச் செலுத்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் நகைக் கடனுக்குரிய பணத்தை முழுமையாக செலுத்தி, நகை திரும்பப் பெற்று தருமாறு சாருமதியிடம் தெரிவித்துள்ளாா். அப்போது சாருமதி, அவரது நகையை கொடுக்க மறுத்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த கங்கா மலா், ராயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.அதில், சாருமதி, தனது நண்பா்களுடன் சோ்த்து குறைந்த வட்டிக்கு தங்க நகைகளை அடகு வைத்து தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி நகைகளை வாங்கித் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சாருமதி, அவருக்கு உடந்தையாக இருந்த அவா் நண்பா் திருவொற்றியூா் கிராமத் தெருவைச் சோ்ந்த ச.கதிரேசன் (31) ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.