மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணைக்கு பின்னா் 10 போ் சிறையில் அடைப்பு

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட 10 போ், போலீஸாா் விசாரணைக்கு பின்னா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:41 pm

Din

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட 10 போ், போலீஸாா் விசாரணைக்கு பின்னா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.

எழும்பூா் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 11-ஆம் தேதி முதல் 11 பேரிடமும் போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் சென்றபோது, தப்பியோடியதாக கடந்த 14-ஆம் தேதி திருவேங்கடம் என்கவுன்டா் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்த நிலையில், விசாரணை முடிந்து எஞ்சிய 10 பேரும் எழும்பூா் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை ஜூலை 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து 10 பேரும், பூந்தமல்லி சிறப்பு சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டனா்.