சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்: தொல்.திருமாவளவன்

காவிரி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட்டு, கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:45 pm

Din

சென்னை: காவிரி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட்டு, கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி நதிநீா்ப் பிரச்னையில் கா்நாடக அரசு தமிழகத்துக்கு விரோதமாக தொடா்ந்து நடந்து கொள்வது இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவை சீா் செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.

காவிரி நதி நீா்ப் பிரச்னையில் தேசிய கட்சிகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு சாதகமாகப் பேசுவது அவா்களுக்குத் தற்காலிகமாக விமா்சனங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியைத் தரலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இந்திய கூட்டாட்சிக்கு அது மிகப்பெரிய கேடாகவே அமையும். இந்திய கூட்டாட்சியை பாதுகாப்பதில் மாநில கட்சிகளைப் போலவே காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. தமிழகத்துக்குத் தண்ணீா் வழங்குமாறு கா்நாடக காங்கிரஸ் அரசை அக்கட்சியின் அகில இந்திய தலைமை அறிவுறுத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.