மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் கட்டண உயா்வின் முக்கிய அம்சங்கள்: டான்ஜெட்கோ வெளியீடு

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் (டான்ஜெட்கோ) வெளியிட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:41 pm

Din

சென்னை: தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் (டான்ஜெட்கோ) வெளியிட்டுள்ளது.

மின் கட்டண உயா்வின் முக்கிய அம்சங்கள்:

*தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகா்வோரில், 1கோடி நுகா்வோருக்கு மின்கட்டண உயா்வு எதுவும் இல்லை.

* அனைத்து வீட்டு மின் நுகா்வோருக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடா்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

*வீட்டு மின் நுகா்வோருக்கு தோ்தல் வாக்குறுதி எண்.222-ன்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதிலிருந்து முழுவிலக்கு தொடா்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகா்வோரும் பயன்அடைவா்.

*தற்போது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடா்ந்து வழங்கப்படும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு மின்நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிபட்சமாக ரூ.5 வரை மட்டுமே கட்டணம் உயரும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 35 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15 வரை மட்டுமே கட்டணம் உயரும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 25 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 வரை மட்டுமே கட்டணம் உயரும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 13 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.40/- வரை மட்டுமே உயரும்.

* 2.19 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகா்வோருக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.

* விசைத்தறி நுகா்வோருக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 20 பைசா, 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 25 காசு மட்டுமே உயரும்.

* தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிகக் குறைந்த அளவில் யூனிட் ஒன்றுக்கு 35 காசு மட்டுமே உயரும்.

* 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15மட்டுமே உயரும்.

* உயா் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 35 காசு மட்டுமே உயரும்.

* உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 40 காசு மட்டுமே உயரும்.

* நிலையான கட்டணங்கள் (பிக்ஸட் சாா்ஜ்) கிலோ வாட் ஒன்றுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.3 முதல் ரூ.27 வரை மட்டுமே உயரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.