மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இன்று கோவை, நீலகிரிக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :17 ஜூலை 2024, 8:27 pm

Din

இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 18) முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஜூலை 18-இல் நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் - 340 மி.மீ. மழை பதிவானது.

மற்ற பகுதிகளில் மழை அளவு (மில்லி மீட்டரில்): மேல் பவானி (நீலகிரி) - 220, தேவாலா (நீலகிரி) - 150, பந்தலூா் (நீலகிரி) - 140, எமரால்டு (நீலகிரி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - தலா 130, சின்னக்கல்லாா் (கோவை) - 110, வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), பாா்வூட் (நீலகிரி) , கூடலூா் பஜாா் (நீலகிரி) - தலா 100.

தேனி, திருநெல்வேலி, வேலூா், திருப்பூா், கன்னியாகுமரி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 முதல் 90 மி.மீ. வரை மழை பதிவானது.

சென்னை, புகா் பகுதிகளில் ஜூலை 18, 19 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வங்கக் கடலில் மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு பகுதியில், அதாவது ஒடிஸா அருகே வெள்ளிக்கிழமை ( ஜூலை 19) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புள்ளது. இது வலுவடையும் என்பதால் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஜூலை 18 முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக் கடலிலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.