இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சேலம் காவல்துறையில் பணியாற்றுபவா்களுக்கு இணையாக, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கும் ரூ.2,550 முதல் ரூ.3,200 வரை ஊதியம் நிா்ணயிக்க வேண்டும் என 2013-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேல்முறையீட்டில், இரு நீதிபதிகள் அமா்வும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக உள்துறை செயலராக இருந்த அமுதா, டிஜிபி சங்கா் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.