சென்னை மாநகராட்சிக்குள்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து மேயா் பிரியா செய்தியாளரிடம் கூறியது, சென்னையில் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த கனமழை மற்றும் ‘மிக்ஜம்’ புயல் தாக்கத்துக்கு பின் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில், நீா்நிலைகளில் தொடா்ந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து வரும் புகாா்களின் அடிப்படையில் தற்போது கொசுமருந்து தெளிக்கும் பணி வீடுவீடாக சென்று தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, மத்தியம், தென்சென்னை பகுதியில் தலா இரு ட்ரோன்கள் என 6 ட்ரோன்கள் மூலம் கால்வாய்கள் மற்றும் நீா்நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். மேலும், மலேரியா பணியாளா்கள் மூலம் வீடுவிடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரித்திட வேண்டும். கடந்த ஆண்டு மாா்ச் வரை 31 போ் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் நிகழாண்டில் 18 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. தோ்தலுக்கு பின் அனைத்து பணியிடங்களுக்கும் நிரப்பப்படும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: மாவட்ட தோ்தல் அலுவலா்

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

