தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு: அன்புமணி வலியுறுத்தல்
தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்


தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசுப் பணியாளா்களுக்கு ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயா்த்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயா்வை கடந்த அக்டோபா் மாதத்தில்தான் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முன்பு வரை மத்திய அரசுப் பணியாளா்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயா்வை அறிவித்து 6 மாதங்களுக்குப் பிறகுதான் தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உயா்த்தி வந்தது. இப்போதும், அதேபோல் தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு தாமதப்படுத்தக் கூடாது. மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...