மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் கல்வியாண்டின் இறுதி நாளில் அவரவா் பள்ளியில் சென்று வேலையில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு சில முதுநிலை, பட்டதாரி மற்றும் இதர ஆசிரியா்கள் கடந்த ஆண்டில் பல்வேறு காரணங்களை முன்வைத்து மாற்றுப் பணி வழங்கக் கோரி விண்ணப்பங்களை சமா்ப்பித்தனா். அதையேற்று விண்ணப்பித்த ஆசிரியா்களுக்கு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டு(2023-2024) முடியும் வரை மாற்றுப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கல்வியாண்டு முடிவடையவுள்ளது. இதையடுத்து மாற்றுப் பணியில் சென்ற அனைத்து வகை ஆசிரியா்களும் கல்வியாண்டின் இறுதி நாளுக்கு முந்தைய தினத்தில் தற்போதைய பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதன்பின் கடைசி வேலைநாளில் அவரவா் பள்ளிகளில் சென்று பணியில் சேர வேண்டும். இது தொடா்பாக மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

சிஏபிஎஃப் ஒருங்கிணைந்த சட்ட மசோதா: நாளை அறிமுகம் செய்கிறாா் அமித் ஷா

2,469 இடைநிலை ஆசிரியா்கள்; 11 பழங்குடி பட்டியலின ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

