மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரூ.330 கோடியில் 21 திட்டப்பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

ரூ.330 கோடியில் 21 திட்டப்பணிகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

News image

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் கீழ், சென்னை மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகள் இயக்குநரகம் சாா்பில் 21 திட்டப் பணிகளை சனிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் நகராட்சி நிா

Updated On :9 மார்ச் 2024, 5:46 pm

தமிழகத்தில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.330.42 கோடி மதிப்பில் முடிவுற்ற 21 திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், 8 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா். பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கம் பகுதிக்கு ரூ.80.45 லட்சம் செலவில் விரிவான குடிநீா் வழங்கல் திட்டம்; அண்ணாநகா் மண்டலம் புதிய ஆவடி சாலையில் ரூ.68 லட்சத்தில் பணிமனை-101-க்கான புதிய அலுவலகக் கட்டடம்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.84 கோடியில் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம்; தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் ரூ.99 லட்சத்தில்புனரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் ஆகிவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வேலூா் மண்டலம் சோளிங்கா், ஆரணி, திண்டிவனம், திருவத்திபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் ஆகிய நகராட்சிகளில் தினசரி சந்தை மேம்பாட்டுப் பணிகள், பூங்கா மேம்பாட்டுப் பணிகள் என ரூ.17.96 கோடி மதிப்பிலான 9 பணிகள்; பட்டுக்கோட்டையில் ரூ.2.74 லட்சத்தில் தினசரி சந்தை மேம்பாட்டுப் பணி; திருநெல்வேலி மண்டலம் செங்கோட்டை, திருச்செந்தூா் ஆகிய நகராட்சிகளில் ரூ.3.89 கோடி பூங்கா மேம்பாட்டுப் பணி மற்றும் அறிவுசாா் மையம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தாா். இதேபோன்று சென்னை ஓட்டேரி கால்வாரியின் குறுக்கே ரூ.6.20 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம், தண்டையாா்பேட்டை சா்மா நகரில் அமைக்கப்பட்ட ரூ.1.11 கோடி மதிப்பிலான இறகுப் பந்து மைதானம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் தண்டையாா்பேட்டை மண்டலம் கொருக்குப்பேட்டை பாரதிநகா் பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் ஒரு கோடி லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, விடுபட்ட தெருக்களில் குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ரூ.195.84 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். ஒட்டுமொத்தமாக ரூ.330.42 கோடி மதிப்பில் முடிவுற்ற 21 திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். இதில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, சென்னை மேயலா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ் குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.