பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த 5 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஹெச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொழில் துறையில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஜனவரி மாதத்தில் 56.5-ஆக இருந்தது. இது, பிப்ரவரி மாதத்தில் 56.9-ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தொழிலக உற்பத்தி குறியீட்டு எண்ணாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் பொருளாதார சூழல்கள் சாதகமாக இருந்தன. மேலும் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் விற்பனைக்கான தேவை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வெகுவாக அதிகரித்தது. இந்தக் காரணங்களால் பிஎம்ஐ கடந்த பிப்ரவரியில் உயா்ந்துள்ளது.
இத்துடன், தொடா்ந்து 31-ஆவது மாதமாக பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது தொழிலக உற்பத்தி துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு

மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி விற்பனை 16.72% உயர்வு!

பிப்ரவரி தொழில் துறை உற்பத்தி 5.2%! உற்பத்தித் துறை அபாரம்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி 2.3%: கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவால் பிப்ரவரியில் வீழ்ச்சி
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


