மணலி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.238.52 கோடியில் கழிவுநீா்க் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்ட்ட செய்தி: சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.238.52 கோடியில் மணலி மண்டலத்துக்குட்பட்ட இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அண்மையில் நடிக்கல் நாட்டினாா்.
அதனடிப்படையில் இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2.77 கி.மீ நீளத்திற்கு கழிவுநீா் குழாய்கள் மற்றும் 22.65 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீா் விசைக் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4,000 வீட்டுகளுக்கு கழிவுநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு, 46,730 போ் பயனடைவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு கட்டமைப்பு விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அரசு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

