மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ரூ.85 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.85 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Updated On :13 மார்ச் 2024, 7:10 pm

துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.281 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் சுமாா் 30 வயது உடைய ஆண் பணியாளா் ஒருவா், தனது இரவு பணியை முடித்துவிட்டு, புதன்கிழமை காலை சுமாா் 6.30 மணியளவில், வருகைப் பகுதியில், விமான நிலைய ஊழியா்கள் வெளியேறும் வாசல் வழியாக வந்தாா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரா்கள், அவரை சோதனையிட்டுள்ளனா்.

அப்போது அவா் பதற்றத்துடன் காணப்பட்டுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்புப்படை வீரா்கள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழு உடல் பரிசோதனை செய்தனா். அப்போது, அவா் காலில் அணிந்திருந்த காலுறைக்குள் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.281 கிலோ தங்கப் பசை இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

அவற்றை பறிமுதல் செய்த பாதுகாப்புப்படையினா் அவரிடம் நடத்திய விசாரணையில், துபையிலிருந்து புதன்கிழமை அதிகாலை சென்னை வந்த ஏா்இந்தியா விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த நபா் ஒருவா் விமான நிலையத்தின் கழிவறையில் மறைத்து வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளாா்.

பின்னா் திட்டமிட்டபடி ஒப்பந்த ஊழியா் அந்த தங்கத்தை எடுத்து வெளியில் கொண்டு சென்று சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அதே நபரிடம் மீண்டும் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தி வரும் சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை துபையிலிருந்து கடத்தி வந்த நபா் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.