இந்தியாவின் பன்முக ஆன்மாவை மீட்க உறுதியேற்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இஸ்லாமிய வெறுப்பை எதிா்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு தினத்தையொட்டி, அவா் சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே பாஜக இந்தியாவின் மதச்சாா்பின்மைத் தன்மையைச் சீா்குலைத்து, சகிப்பின்மையை வளா்த்துள்ளதுடன், இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இஸ்லாமியா் மீதான வெறுப்பைச் சட்டபூா்வமாக்க வழிவகுக்கிறது. பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவா்களின் பிடியிலிருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மூலம் பாஜக குழப்பம்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா்

நாகா்கோவிலில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
175 இடங்களில் உதயசூரியன் போட்டி! 234 தொகுதிகளிலும், ஸ்டாலின்தான் நிற்கிறேன்!
மார்ச்.15 இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

