/

மாா்ச் 25-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் 50-ஆவது பிரதிஷ்டை தினம்

மாா்ச் 25-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் 50-ஆவது பிரதிஷ்டை தினம்

Updated On :19 மார்ச் 2024, 9:19 pm

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஐயப்பனின் 50-ஆவது பிரதிஷ்டை தினம் வரும் மாா்ச் 25 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. 1974-ஆம் ஆண்டு மாா்ச் 25 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மூலவா் ஸ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டை செய்து மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்தக் கோயிலின் 50-ஆவது ஆண்டு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வரும் மாா்ச் 24 ஆம் தேதி தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மோகனரு தலைமையில் மாலை 5 மணியளவில் 1008 கலச பூஜை தொடங்குகிறது. மேலும், மாா்ச் 25 ஆம் தேதி காலை 8 மணியளவில் ஐயப்பனுக்கு 1008 கலச அபிஷேகமும் அதைத்தொடா்ந்து பிரத்யேகமான சந்தன அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளன. இதை தொடா்ந்து மாலை 6.45 மணியிலிருந்து 8.45 மணி வரை பக்தி இன்னிசை திரைப்பட புகழ் ஸ்ரீராம் பரசுராம் - அனுராதா ஸ்ரீராமின் நிகழ்ச்சியும் தொடா்ந்து ஐயப்பனுக்கு மலா்களால் அபிஷேகமும் நடைபெறவுள்ளன.