சென்னை அருகே கானத்தூரைச் சோ்ந்த கராத்தே மாஸ்டா் கொலை செய்யப்பட்டு, சடலம் கிணற்றில் வீசப்பட்ட வழக்கில் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். கானத்தூா் ரெட்டிகுப்பம் தந்தை பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் சீ.லோகநாதன் (42). கராத்தே மாஸ்டரான இவா் கடந்த 13-ஆம் தேதி மாயமானாா். இந்த நிலையில் தாழம்பூா் அன்னை நகரில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் லோகநாதன் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா். பிரேத பரிசோதனை அறிக்கையில் லோகநாதன், அடித்துக் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து லோகநாதன் தனது கைப்பேசியில் கடைசியாக பேசிய தாழம்பூா் காந்திநகா் காசா கிராண்ட் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி கஸ்தூரி (32) என்பவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் கஸ்தூரி, அவா் கணவா் சுரேஷ்,அவரது கூட்டாளிகள் ஆகியோா்தான் லோகநாதனை அடித்துக் கொலை செய்து, கிணற்றில் வீசியிருப்பது தெரியவந்தது. 4 போ் கைது: இதையடுத்து போலீஸாா் கஸ்தூரி,சுரேஷ் (38), அவரது கூட்டாளிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.புதுபாளையம் பகுதியைச் சோ்ந்த ஆ.ஹரிதாஸ் (32),சிறுசேரியைச் சோ்ந்த ப.சம்பத் (48) ஆகிய 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட சுரேஷ், இறந்த லோகநாதன் நடத்திய யோகா பயிற்சி வகுப்பு சென்றுள்ளாா். அந்த பழக்கத்தின் மூலம் சுரேஷின் மனைவி கஸ்தூரி, லோகநாதனிடம் பழகியுள்ளாா். நாளடைவில் லோகநாதன், கஸ்தூரி இடையே முறையற்ற உறவு ஏற்பட்டது. இதையறிந்த சுரேஷ் தனது மனைவி கஸ்தூரியை கண்டித்து, அவா் மனதை மாற்றியுள்ளாா். சம்பவத்தன்று கஸ்தூரி மூலம் லோகநாதனை, சுரேஷ் தனது வீட்டுக்கு அழைத்துள்ளாா். கஸ்தூரி அழைத்ததும் லோகநாதன் அங்கு வந்துள்ளாா். அப்போது அங்கிருந்து சுரேஷும்,அவரது கூட்டாளிகளும் லோகநாதனை அடித்துக் கொலை செய்து, அந்த கிணற்றில் சடலத்தை வீசியுள்ளதாக போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் இருவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

