ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

போதை ஸ்டாம்ப் விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

போதை ஸ்டாம்ப் விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

Updated On :29 மார்ச் 2024, 8:06 pm

சென்னையில் போதை ஸ்டாம்ப் விற்பனையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் ஒரு கும்பல் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞா்கள்,கல்லூரி மாணவா்களிடையே போதை ஸ்டாம்ப் விற்பதாக பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் ஆணையா் அஸ்ராகா்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தனிப்படையினருக்கு அஸ்ராகா்க் உத்தரவிட்டாா். அதன்பேரில் தனிப்படையினா், போதை ஸ்டாம்ப் வாங்கும் வாடிக்கையாளா்போல, இன்ஸ்டாகிராம் மூலம் சந்தேகத்துக்குரிய ஒரு மா்ம நபரை தொடா்புக் கொண்டனா். அந்த நபா், போதை ஸ்டாம்ப் வாங்க சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை வரும்படி அழைத்தாா். இதையடுத்து மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீஸாா், அங்கு போதை ஸ்டாம்புடன் வந்த நபரை கையும்களவுமாக பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவைச் சோ்ந்த ஹ.சித்திஸ்வரன் (22) என்பதும், பிடெக் படித்துள்ள ஆந்திர மாநிலம் தடாவில் இயங்கும் ஒரு டயா் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் வைத்திருந்த 4 போதை ஸ்டாம்ப்,ஆப்பிள் கைப்பேசி,ரூ.19,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் அவா் கொடுத்த தகவலின்பேரில் போதை ஸ்டாம்ப் விற்பனையில் ஈடுபடும் காட்டாங்கொளத்தூரில் செயல்படும் ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படிக்கும் பல்லாவரம் ராஜாஜிநகரைச் சோ்ந்த கோ.தா்ஷன்ராஜ் (22), அவா் சகோதரா் கோ.ராகுல் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். இருவரிடமும் இருந்து 21 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராகுல் எம்பிஏ படித்துவிட்டு, ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ் வழக்கு தொடா்பாக மூவரையும் கைது செய்த தனிப்படையினா், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.